ஸ்ரீ கிருஷ்ணனின் பேரனாகிய மன்னன் வஜ்ரனுக்கும், ப்ருகு குலத்து ரிஷி மார்கண்டேயனுக்கும் இடையே நடந்த சம்பாஷணை போன்று வடிவமைக்கபட்டிருக்கின்றது இந்த நூல்.
வஜ்ரன் : தூய்மையானவனே, தெய்வங்கள் எப்பொழுதும் நமக்கு அருகாமையில் இருக்கும் வண்ணம், சாத்திரங்கள் கூறும் குணாதிசயங்களுடன், அவ் உருவங்களை தீட்டுவதெப்படி என்று சற்று விளக்கமாக கூறு.
மார்கண்டேயன் : மனிதகுலத்தின் தலைவ, எவன் ஒருவனுக்கு ஓவியக்கலையின் விதிமுறைகள் சரியாக தெரியவில்லையோ, அவனால் சித்திரங்களின் குணாதிசயங்களை புரிந்துகொள்ள முடியாது.
வஜ்ரன் : ப்ருகு குலம் தழைக்கசெய்தோனே, ஓவியக்கலையின் விதிகளை நன்கு அறிந்தவனால் மட்டுமே , சித்திரங்களின் குணாதிசயங்களை வார்த்தையால் விளக்கவும் முடியும், ஆக , நீயே அவ்விதி முறைகளை விளக்கமாக கூறு.
மார்கண்டேயன் : நாட்டியக்கலை பற்றி அறியாமல் ஓவிய விதிகளை அறிவது சாத்தியமில்லை. ஆனால் மன்னா, இவ்விரண்டோடு மாத்திரம் கூட எந்த ஒரு காரியத்தையும் இவ்வுலகில் செய்தல் இயலாது.
வஜ்ரன் : ஆஹா, மார்கண்டேய, அப்படியானால் முதலில் நாட்டியகலை பற்றி விளக்கமாக கூறு, நாட்டியகலை விதிகள், ஓவிய விதிகள் பற்றி அறிய உதவுமல்லவா ?
மார்கண்டேயன் : இசை ஞானமிலாதவருக்கு, நாட்டியகலை பற்றி அறிதல் என்பது அரிது. இசையின்றி நாட்டியம் என்பது சாத்தியமில்லாத விஷயம்.
வஜ்ரன் : ப்ருகு குலதித்தின் சிறந்த தோன்றலே, நீ தர்மத்தை நன்கு அறிந்தவன். முதலில் இசையை பற்றி கூறு, பின்னர் நாட்டியத்தை பற்றி கூறுவாய், ஏனெனில் இசை ஞானம் முழுமையாக பெற்றால், நாட்டிய அறிவு தானாகவே வரும் அல்லவா ?
மார்கண்டேயன் : பாட்டு பாட தெரியாமல், இசை ஞானம் கிட்டுவதில்லை. பாடல்களின் விதிகளை அறிந்தவன் அனைத்தையும் சரியாக அறிந்தவனாகிறான்.
வஜ்ரன் : தர்மத்தை நிலைநாட்டுபவர்களில் முதன்மையானவனே, பாடல் கலையினை பற்றி இப்பொழுது கூறு, ஏனெனில் பாடல் கலை அறிந்தவன், மனிதரில் சிறந்தவன், அனைத்தையும் அறிந்தவன்.
No comments:
Post a Comment